Read and Share about Virgin Mary

மானிட வாழ்வு………..

மானிட வாழ்வு………..

யார் மனிதன்? எது மனித வாழ்வு? இத்தகைய வினாக்களை நாம் எம்முள் எழுப்ப வேண்டும்.
பொதுவாக நாம் எம்மிடம் கேள்விகளை கேட்பதில்லை. பிறரிடமே கேள்விகளைக் கேட்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக, நாம் எம்மிடம் சில கேள்விகளைக்
கேட்போம்.

யார் மனிதன்? என்ற வினாவை எடுத்துக் கொள்வோம். இப்பூமியில் காணப்படுகின்ற உயிரினங்களுள்
அதி உன்னதம், அதி அற்புதம், அதி உயர்நிலை வாய்ந்தவன் மனிதன் என்கின்றோம். மனம் உள்ளவன் மனிதன், மானம் உள்ளவன் மனிதன், பகுத்தறிவு உடையவன்
மனிதன், சமூகமாக வாழக்கூடியவன் மனிதன் என்றெல்லாம் மனிதன் எனும் பதத்திற்கு விளக்கம் கொடுக்கின்றோம். உடல், ஆன்மா, அறிவு, உணர்வு என்பவற்றை
ஒருங்கே கொண்டு வாழ்பவன் மனிதனாவான்.

மனிதன் தன்னுள் மறைந்திருக்கின்ற பல்வேறு ஆற்றல்களை அறிந்து, செவ்வையாக மதிப்பீடு செய்து,
முறையாக வளர்ந்து, அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் தெய்வம் ஆகலாம். மனிதன் பிறப்பால் விலங்கு, வளர்ப்பினால் மனிதன், ஆன்மீக அடைவினால் தெய்வம்.
ஆகவே, மனிதன் விலங்காகவும் வாழலாம். அது மிகவும் தாழ்ந்த நிலை வாழ்வு. மனிதன் மனிதனாக வாழ்தல் மனிதனுக்குரிய வாழ்வு. மனிதன் வாழவேண்டிய வாழ்வும்
அதுவே. மனிதன் மனிதனாக வாழும் போது படிப்படியாக உயர்ந்து, ஆன்மீக முதிர்வு பெற்று தெய்வீக நிலைக்கு உயருகின்றான்.

யானையின் பலம் அதன் தும்பிக்கையில் உள்ளது. மனிதனின் பலம் அவனிடம் ஆழ்ந்து மறைந்து
கிடக்கின்ற ஆன்மீகத்தில் தான் உள்ளது என்றால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கூற்றே.

மனிதன் தன் உடற்பலத்தையும், அறிவுப்பலத்தையும் தான் நேசித்து வந்துள்ளான். ஆன்மீகப்பலம் என்பதை
மிகப் பெரும்பாலானோர் இதுவரை அறிந்து கொள்ளாமலே இருக்கின்றனர். உடற்பலம் இளமையில் இருக்கின்ற அளவிற்கு முதுமையில் இருப்பதில்லை. அதேபோல் இன்று
அறிவுப் பலம் துர்ப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. தற்கால அறிவு விபரீத புத்திக்கு இட்டுச் செல்கின்றது. மனிதனுடைய அறிவுப்பலமும் வர வர
பலவீனமாகிக் கொண்டு வருகின்றது.

உடற்பலம், அறிவு என்பவற்றுடன் ஆன்மீகம் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. உண்மையில்
மனிதனிடம் ஆன்மீகப்பலம் சேரும் போதே உடற்பலம், அறிவுப்பலம் ஆகிய இரண்டும் உறுதி பெறுகின்றன. அத்துடன் இவை இரண்டும் ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதுடன்
அவற்றை சரியான திசையில் செலுத்தவும் ஆன்மீகம் உதவுகின்றது. ஆன்மீகம் இல்லாத உடல்வலுவும், அறிவும் மாலுமி இல்லாத கப்பல் போன்றது.

நல்ல மனித பண்புகளை, மனித விழுமியங்களை வாழ்க்கையில் அனுசரித்தல் மூலம் ஆன்மீகம் வளர்க்கப்படுகின்றது.
இம்மானிடப் பண்புகள் எல்லாம் மனிதருள் அடங்கிக் கிடக்கின்றன. அவை வெளிப்படுத்தப்பட வேண்டியவை. அப்போது தான் அவற்றால் மனித சமுதாயம் நல்ல பயனை அடையும்.
இம்மானிடப் பண்புகளே ஆன்மீகப் பண்புகளாக மலர்ச்சி பெறுகின்றன.

உண்மை, அன்பு, நீதி, நேர்மை, மனித நேயம், பிறருக்கு நன்மை செய்தல், தீமை தவிர்த்தல், நன்னடத்தை என்பவற்றை
வாழ்வில் கடைப்பிடித்தல் ஆன்மீக வாழ்க்கையாகும். இம்மேன்மையான பண்புகளின் பொருட்டு வாழும் போது இடையூறுகள் குறுக்கீடு செய்யலாம். ஆனால் அவற்றை
பொருட்படுத்தாமல் நெறிபிறழாது வாழும் போது ஆன்மீகம் மலர்ச்சி பெறுகின்றது. எழுச்சி எய்துகின்றது. எனவே நெறிபிறழாத மனித பண்போடு இணைந்த வாழ்க்கையே ஆன்மீக
வாழ்க்கை. மனிதனால் மட்டுமே ஆன்மீக வாழ்க்கையை வாழமுடியும்.

இனி ஆரம்பத்தில் நாம் எழுப்பிய கேள்விக்கு வருவோம்…….

யார் மனிதன்?
ஆன்மீகம் நிறைந்தவன் மனிதன் என்போம். மனிதனிலிருந்து ஆன்மீகத்தை எடுத்துவிட்டால் அவன் விலங்கு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றான்.

எது மனித வாழ்வு?
ஆன்மீகம் கலந்த வாழ்வு. அதாவது நன்னெறி தவறாத வாழ்வு. ஒருவனுடைய வாழ்வில் நற்பண்புகள் நிறைந்திருந்தாலே மனித வாழ்வு ஆகின்றது.

Advertisements

Comments on: "மானிட வாழ்வு……….." (1)

  1. Its so wonderful. Keep it up

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: